undefined

  வைரல் வீடியோ... வகுப்பறையில் குடைபிடித்தபடியே பாடம் கவனித்த மாணவர்கள்… அரசு பள்ளியில் அவலம்!  

 


 
இந்தியாவின் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்திலும் தொடர் மழை பெய்தது. இங்கு அமைந்துள்ள  குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கியது.

 

இதனையடுத்து வகுப்பறைக்குள் தண்ணீர் கசிய ஆரம்பித்தது. அதோடு வகுப்பறைகளிலும் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருந்தது.  இந்நிலையில் மழை பெய்யும் சமயத்தில் மாணவர்கள் வகுப்பறைக்குள் குடைபிடித்தவாறு அமர்ந்து கொண்டே பாடம் கவனித்தனர்.
இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக  வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது‌. இதனைத்  தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்  பள்ளி உதவியாளர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!