30 வயசு தான்!! உடற்பயிற்சி செய்யும் போது இளைஞர் சுருண்டு விழுந்து  மரணம்!! தொடரும் சோகம்!! 

 

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் எனற ஆசையில் இறங்குவர். இதற்காக அவர்கள் கடும் உடற்பயிற்சியும் மேற்கொள்வர். ஆனால் சிலர் இதற்காக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் விபரீதத்தில் முடிந்துவிடுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டும் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரும் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு இளைஞர்கள், நடு வயதுடையோர், ஜிம் மாஸ்டர் என பலரும் உயிரிழந்து வரும் செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் சென்னை ஆவடியில் உள்ள 24 வயதுடைய ஆகாஷ் என்ற இளைஞர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

ஆகாஷ், அதிக அளவிலான ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதால், அவரது 2 கிட்னிகளும் செயலிழந்தது அவரது மரணத்துக்கு காரணம் என தெரியவந்தது. இந்தநிலையில் தற்போது கோவையில் 30 வயது இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் மணியகாரன்பாளையம் ரவீந்திரநாத் தாகூர் சாலையைச் சேர்ந்தவர் பி.தினகர். 30 வயது இளைஞரான இவர், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் உடலை பேணுவதற்காக இறைச்சி வகை உணவுகளை உண்ணக்கூடிய டயட் முறையை பின்பற்றி வந்துள்ளார். மேலும் சில புரோட்டீன் மாத்திரைகளை உண்டு வந்துள்ளார்.

அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போலச் சாப்பிட்டுவிட்டு, மாத்திரைகளை எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தந்தை, இளைஞர் தினகருக்கு அருகே உள்ள மருந்துக் கடையில் இருந்து மருந்து வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும் அது வேலை செய்யாமல் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வலி நிவாரணி மாத்திரையும் உண்டுள்ளார்.

தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததால் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!