undefined

 பைக்கில் இருந்து தவறி விழுந்த சோகம்... லாரி ஏறியதில் இளைஞர் உயிரிழப்பு!

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்த வாலிபர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இளைஞர் துடிதுடித்து உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கனகராஜ்(29). அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சத்தியமூர்த்தி(26). நண்பர்கள் இருவரும் நேற்று பைக்கில் கோவில்பட்டிக்குச் சென்றுவிட்டு, பிற்பகலில் ஊருக்குத் திரும்பினர். பைக்கை சத்தியமூர்த்தி ஓட்டிச் சென்றுள்ளார். 

எட்டயபுரம் நகருக்குள் சென்றபோது, திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் பின்னால் அமர்ந்திருந்த கனகராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். அப்போது அவர் மீது பின்னால் வந்த லாரி மோதியதாம். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தியமூர்த்தி காயமடைந்தார். 

தகவல் அறிந்த போலீசார் சத்தியமூர்த்தியை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!