மொத்த கட்டமைப்பும் மாற்றம்... வார்ரூம் மூலம் தவெக நிர்வாகிகளை கண்காணிக்கும் விஜய்!

 

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சி முழு முயற்சியுடன் தயாராகி வருகிறது. இதற்காக முன்னணி தலைவர் விஜய் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஒரு நிர்வாகக் குழு அமைத்துள்ளார். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு மாவட்ட அளவில் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு, கட்சி தொடர்பான தகவல்கள் மற்றும் மக்களுடன் தொடர்பான கருத்துக்களை சேகரித்து நேரடியாக விஜய்க்கு வழங்குகிறது. இதற்கிடையே கட்சிக்கு தேர்தல் சின்னம் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கான விண்ணப்ப படிவம் இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், குழுவின் பணியை மேம்படுத்துவதற்காக ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் நேரடியாக 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார். பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த வார் ரூம் செயல்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொறுப்பான சட்டசபை தொகுதிகளில் மக்கள் பிரச்சினைகள், பிற கட்சிகளின் செயல்பாடுகள், மக்களின் கருத்துகள் போன்ற தகவல்களை வார் ரூமுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று கட்சி அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே மக்கள் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்தவும் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!