undefined

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று வீசிய மனைவி!

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் மோகன்ராஜ்- கீர்த்தனா தம்பதி வசித்து வந்தனர். இதில் மோகன்ராஜ் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மோகன்ராஜ்- கீர்த்தனா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இவர்களின் குடும்ப வாழ்க்கை நல்லமுறையில் சென்றுக்கொண்டிருந்த நிலையில், கீர்த்தனாவுக்கு ஏற்கனவே அறிமுகமான கதிரேசன் என்பவருக்கும் பழக்கம் உண்டானது. இந்த பழக்கம் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. 

<a href=https://youtube.com/embed/-Cw1MT44fdA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-Cw1MT44fdA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி | namakkal" width="560">

இந்த தகவல் கணவர் மோகன்ராஜ்-க்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள மோகன்ராஜை, அவரது மனைவி கீர்த்தனாவும் இவரது கள்ளக்காதலனும்  சேர்ந்து தீர்த்துக்கட்ட திட்டம்போட்டனர்.

இதையடுத்து கணவருக்கு அதிகளவில் தூக்க மாத்திரைகளை கொடுத்து கீர்த்தனா கொல்ல முயன்றுள்ளனர். அதில் பிழைத்துவிட கூடாது என்பதற்காக அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும், தொடர்ந்து தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் கணவர் உயிரிழந்துவிட்டதாக கூறி மனைவி கீர்த்தனா நாடகமாடியுள்ளார்.

எனினும் இதுதொடர்பான புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது மனைவி மீதுபோலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே கொலை செய்தது அம்பலமானது. இந்த நிலையில் கீர்த்தனா, அவரது கள்ளக்காதலன் கதிரேசன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்