திருவிழாவுக்கு புடவை வாங்கித் தரலை... ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில், தசரா திருவிழாவுக்கு கணவர் புது புடவை வாங்கி தராததால் அதிருப்தியடைந்த இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தும்கா மாவட்டம் பாக்ஜோபா கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தோ தேவி (26). இவரது கணவர் டிராக்டர் ஓட்டி வருகிறார். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தசரா திருவிழாவிற்கு கணவரிடம் புது சேலை வாங்கித் தரும்படி செந்தோ தேவி கேட்டுள்ளார். ஆனால் டிராக்டர் ஓட்டி வரும் அவரது கணவரால் புது சேலை வாங்கித் தரமுடியவில்லை என்பதால், மனமுடைந்த செந்தோ தேவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்துக் தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!