undefined

சுங்கச்சாவடியை புல்டோசரால் இடித்து தள்ளிய இளைஞர்…அதிர்ச்சி வீடியோ!

 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஹபூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது சாஜர்சி சுங்கச்சாவடி. அனைத்து வாகனங்களும் சுங்கக்கட்டணம் செலுத்தியதை உறுதி செய்த பிறகு அங்கிருந்து நகர்ந்து கொண்டிருந்தன. சம்பவ நாளில் புல்டோசர் ஒன்று வந்த நிலையில் அதில் இருந்த இளைஞரிடம்  ஊழியர்கள் கட்டணம் செலுத்துமாறு கூறினர். புல்டோசரை ஓட்டி வந்த இளைஞர் இதனால் ஆத்திரமடைந்து  சுங்கச்சாவடியை புல்டோசர் மூலம் உடைத்தார். அவர் கட்டணம் வசூலிக்கும் 2 மையங்களை உடைத்துள்ளார்.


இதனை அந்த வழியாக சென்றவர்கள்  வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அதனை பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம்  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி புல்டோசர் ஓட்டுனர்  கைது செய்யப்பட்டு  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. இதே சுங்கச்சாவடியில் கடந்த வாரம் சுங்க கட்டணம் கேட்டதற்காக ஊழியர் மீது காரை ஒருவர் ஏற்றிய கொடூரம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது  ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!