தாணுமாலயசாமி கோயில் தெப்பக்குள மதில் சுவர் இடிந்து விழுந்து பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயசாமி கோயிலின் தெப்பக்குளத்தில் இன்று (13.11.2025) காலை பெரும் விபத்து நிகழ்ந்தது. குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தொடர்ச்சியான மழையால் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் குளத்தைச் சுற்றியிருந்த பழைய மதில் சுவர் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக மக்கள் அறநிலையத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், மதில் இடிந்த பகுதியை ஆய்வு செய்து, மேலும் சேதம் ஏற்படாதபடி அந்த பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்து போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தினர்.
கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் தூர்வாரும் பணிக்காக அரசு முன்பாகவே ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தது. பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியிருந்த நிலையில், தற்போது மதில் இடிந்து விழுந்ததால் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விரைவாக சுவரை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க