தாயிற் சிறந்த தெய்வமும் கிடையாது... அன்னையர் தின வாழ்த்துக்கள்!
இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையா் தினமாக கொண்டாடப்படுகிறது. எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்.
அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை, தியாகம். உலகில் தம் பிள்ளைகளின் மீது நிபந்தனையற்ற எதிர்பார்ப்பில்லாத அன்பை அனுதினமும் பொழிபவள் தாய் மட்டுமே. அன்னையரின் அன்பை சரியாக அளவிட்டு கூற வார்த்தைகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அந்த அன்பு அத்தனை தூய்மையானது.குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் அவர்கள் ஆற்றும் ஈடு இணையில்லாத தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும்.
அன்னையர் தினத்தை உலகம் கொண்டாட தொடங்குவதற்கு முன்பே நமது முன்னோர்கள் நாம் வாழும் நாட்டினையே ‘தாய்நாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்றும் ‘தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை’ என்றும் அடுத்த தலைமுறைக்கு தாயின் பெருமையை உணர்த்தினர். அன்னையின் சிறப்பை எடுத்துக் கூறவும், தாயை கொண்டாடுவதற்கு ஒரு நாள் மட்டும் போதாது.
தாய் தான் குடும்பத்தின் ஆணி வேர் என்பதை உணர்ந்து நடந்து கொள்வதே தாய்க்கு நாம் அளிக்கும் சிறந்த அன்னையர் தின பரிசாக அமையும். நம்முடன் வாழும் நம் தாய்க்கு இதனை அளித்து விலை மதிப்பு மிக்க வாழ்த்தை பெறலாம். உறவுகள் அழகாகட்டும்.தாய்மையை போற்றுவோம். அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!