undefined

இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது... அதிபர் கிம் உத்தரவால் அதிர்ச்சியில் வடகொரிய மக்கள்!

 

இனி ‘ஐஸ்கிரீம்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது. ‘ஐஸ்கிரீம்’ வார்த்தைக்கு பதிலாக இனி ‘எசெக்கிமோ’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார். 

வடகொரியாவில் பிற மொழிகளின் ஆதிக்கத்தை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக, மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் வேற்றுமொழி வார்த்தைகளை நீக்கிவிட்டு, அதற்கு இணையான, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொற்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வடகொரிய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், வடகொரியாவில் இனி ‘ஐஸ்கிரீம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என அந்நாட்டு அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக ‘எசெக்கிமோ’ அல்லது ‘எரெம்போசங்கி’ என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வடகொரிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?