undefined

“என்னை கைது செய்யலை, விசாரணைக்காக தான் அழைத்துச் சென்றனர்..” – நடிகர் தினேஷ் விளக்கம்!

 

நெல்லை மாவட்டம் பனங்குடி காவல் நிலையத்தில் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு நடிகர் தினேஷ் தானே விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் பனங்குடி பகுதியில் வசிக்கும் நாய்க்குட்டி செல்வின் என்ற ஒருவருடன் ஒரு வழக்கு தொடர்பாக நீண்ட நாட்களாக வழக்கில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வழக்கிற்காக அடிக்கடி வள்ளியூர் நீதிமன்றத்திற்கு ஆஜராகி வருகிறேன்.

இதற்கிடையில், தண்டையார்குளம் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரின் மனைவியிடம், மின்சார துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டேன் என்றும், அவரைத் தாக்கியதாகவும் பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பின்னணியில் நாய்க்குட்டி செல்வினின் தூண்டுதல் உள்ளது,” என தினேஷ் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இன்று நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராகி வந்தபோது, பணகுடி காவல்துறையினர் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக என்னை அழைத்துச் சென்றனர். கைது செய்யவில்லை. காவல்துறையினரிடம் தேவையான ஆவணங்களை காண்பித்தேன். அவற்றை பரிசீலித்த பிறகு என்னை விடுவித்தனர். தேவைப்பட்டால் மீண்டும் அழைப்பதாக தெரிவித்தனர்.

எப்போதும் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். தேவையில்லாமல் சிலர் தூண்டுதலின் அடிப்படையில் என்மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என நடிகர் தினேஷ் விளக்கம் அளித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!