அதுக்கு இந்த விஜய் ஆளில்ல... மிரட்டி பார்க்கிறீர்களா சிஎம் சார்? த.வெ.க தலைவர் ஆவேசம்!
இன்று செப்டம்பர் 20ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பில், தலைவர் விஜய் உரை நிகழ்த்தினார். இந்த உரையில் “என் மனதிற்கு நெருக்கமான நாகை மண்ணில், உங்கள் மீனவ நண்பனாக விஜய்யின் வணக்கம். நாகையில் குடிசைகள் அதிகம், ஆனால் அடுக்கு மொழிகளால் காதுகளில் ரத்தம் வந்துவிட்டது,” எனத் தொடங்கி மீனவர்களின் கஷ்டங்களுக்கு குரல் கொடுப்பதாக உறுதியளித்தார்.
“நான் களத்துக்கு வருவது புதிதல்ல 14 ஆண்டுகளுக்கு முன்பே மீனவர்களுக்காக கண்டன கூட்டம் நடத்தினேன்,” எனக் கூறி மேலும் “வெளிநாட்டு சுற்றுலா சென்று வரும்போது முதல்வர் சிரித்துக்கொண்டே கோடிக் கணக்கில் முதலீடு பெற்றதாக சொல்கிறார். இது வெளிநாட்டு முதலீடா? இல்லை வெளிநாட்டில் முதலீடா? மனசு தொட்டு சொல்லுங்கள் சார்!” என சராமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும், அதனைத்தொடர்ந்து “நாகையில் தொழில் முன்னேற்றம் இல்லை. மீனவர்கள் படும் துன்பங்களுக்கு கடிதம் எழுதிவிட்டு அமைதியாக செல்லும் கபட நாடகம் திமுகவுக்கு இல்லை,” என சாடினார். “நான் பேசுவது 3 நிமிடங்கள் தான். இதை பேசாதே, அதை பேசாதே, கையை இவ்வளவு தான் தூக்க வேண்டும், மக்களை பார்த்து சிரிக்கக் கூடாது என்கிறார்கள்.
நேரடியாகவே கேட்கிறேன் சிஎம் சார் மிரட்டி பார்க்கிறார்களா? அதுக்கு இந்த விஜய் ஆளில்ல சார்…அதுக்கு நாம ஆளில்ல சார். மிஞ்சி போனால் என்ன செய்வீர்கள்? கொள்கையை சும்மா பெயருக்கு வைத்துவிட்டு சொந்த குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்தமா உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? என கேள்வி எழுப்பினார். ” அடக்குமுறை, அராஜகம் வேணாம் சார், நான் தனி ஆள் இல்லை, மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி சார் .
தொடர்ந்து “மீனவர்களுக்காக குரல் கொடுப்பது என் கடமையும் உரிமையும். தமிழ்நாடு மீனவர்கள், இந்திய மீனவர்கள் என பிரித்து பார்க்க நான் பாசிச பாஜக இல்லை,” என பேசியுள்ளார். ” நமது பிரச்சார பயணத்தை பார்த்து சனிக்கிழமை என விமர்சிக்கிறார்கள். வார இறுதி நாட்களில் மக்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் ஓய்வு நாட்களில் மக்களை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு தான் சனிக்கிழமையில் பிரச்சார பயணத்தை முடிவு செய்தோம். மேலும் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்தோம் அரசியலிலும் சிலருக்கு ஓய்வு கொடுக்கணும்ல? எனவும் பேசியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!