undefined

  முதல்வர் அதிரடி உத்தரவு... ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! 

 

தமிழகத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் உட்பட மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர்  மு.க.ஸ்டாலின், “நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை. வாழ்த்து வாங்க இங்கு வந்துள்ளேன். பொதுவுடைமை கட்சிக்கும் நூற்றாண்டு விழா, நல்லகண்ணு ஐயாவிற்கும் நூற்றாண்டு விழா. இதுபோல பெருமை யாருக்கும் அமையாது” என பேசினார். மேலும் நினைவு பரிசாக திருவள்ளுவர் சிலை ஒன்றை தோழர் நல்லகண்ணுவிற்கு வழங்கினார்  


தற்போது வெளியான தமிழக அரசு குறிப்பின்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு பிறந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் வசதி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு அதற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு கட்டடம்” என பெயர் சூட்ட தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே 2022ல்  தமிழக அரசு தோழர் நல்லகண்ணுவுக்கு  தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!