ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி... ஏசி கம்ப்ரஸர் வெடித்து சிதறியதில் சோகம்!
ஏஸி கம்ப்ரஸர் வெடித்து சிதறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரைச் சேர்ந்த சச்சின் கபூர், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சச்சின் கபூர். அவரது மனைவி ரிங்கு கபூர், மகள் சுஜன் கபூர் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 1:30 மணிக்கு 4 மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் ஏசி கம்ப்ரஸர் வெடித்து சிதறியுள்ளது. இச்சம்பவத்தின் பொது இரவு கபூர் குடும்பம் தூங்கிக் கொண்டிருந்தது. விபத்து நடந்த போது முதல் தளத்தில் உள்ள வீடு காலியாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெடிப்பின் காரணமாக பரவிய புகையால் சச்சின் கபூர், ரிங்கு கபூர் மற்றும் அவர்களது மகள் சுஜன் ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அதேநேரம், வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களது மகன், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஜன்னல் வழியாக குதித்து வெளியே தப்பி விட்டார். ஆனால் அவர் அதிகளவு சுவாசித்ததில், தற்போது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
“நாங்கள் பெரிய வெடி சத்தம் கேட்டு விழித்தோம். உடனே கட்டடத்தில் உள்ள மற்றவர்களைக் காப்பாற்ற முயன்றோம்” என தெரிவித்தனர். 4 வது தளத்தில் 7 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்ததாகவும் 3 வது தளத்தை சச்சின் கபூர் தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!