குழந்தைகளை பாதிக்கும்... பள்ளி திறப்பை ஒத்தி வைக்க டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!
தமிழகத்தில் வெப்பச்சலனம் இன்னும் அதிகரித்து காணப்படும் நிலையில், ஜூன் 4ம் தேதி பள்ளிகளைத் திறக்காமல், பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுட்டெரிக்கும் கோடை வெயில்: தமிழகத்தில்பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்! தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி அரசுப் பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
’கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் 2ம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!