undefined

இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்... வார இறுதி நாட்கள், முகூர்த்த நாள்... அலைமோதும் கூட்டம்! போக்குவரத்து துறை அறிவிப்பு!

 

கோடை விடுமுறை முடிந்தாலும், பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று திரும்புவதும், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருவதும் தொடர்கிறது. இந்நிலையில், முகூர்த்த நாட்கள், வார இறுதி விடுமுறை தினங்களில் பொதுமக்களின் வசதிக்காக இன்று முதல் மூன்று தினங்களுக்கு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் பொதுவாகவே தென்மாவட்டங்களுக்கு சென்று திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிறைமாத கர்ப்பிணி பெண்ணைப் போல தென்மாவட்டங்களுக்குச் செல்கிற அனைத்து ரயில்களுமே கூட்ட நெரிசலாக தான் சென்று திரும்புகின்றன. இதனை ஈடுகட்டவும், மக்களின் வசதிக்காகவும்  வார இறுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து வார இறுதி நாட்களான இன்றும் நாளையும், ஜூலை 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  

அதே போன்று ஜூலை 9ம் தேதி முகூர்த்த நாளில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற இருப்பதாலும், வார இறுதி நாட்களாக இருப்பதாலும்  பொதுமக்கள் வசதிக்காக  தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வேதாரண்யம். திருத்துறைப்பூண்டி ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன்  திருச்சியிலிருந்து கோயமுத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர் நாகப்பட்டினம் உட்பட  பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழக  அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குனர்  அறிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்