சற்றே சரிந்த தங்கம்... நகைப்பிரியர்கள் உற்சாகம்!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.இன்றைய நிலவரப்படி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!