பிசிசிஐ ட்விஸ்ட்!! இன்னிக்கும் மழை பெஞ்சா கப் யாருக்கு?!
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் முண்ணனி நகரங்களில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நேற்று குஜராத் - சென்னை அணிகள் விளையாடும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற இருந்தது. தொடர் கனமழை காரணமாக ஆட்டம் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை கொட்டித்தீர்க்கும் நிலையில் இன்றும் மழை பெய்தால் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும் என்பது ஐசிசி என்ன முடிவு எடுக்கும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
இருப்பினும் இன்று மாலையிலும் அகமதாபாத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒருவேளை இன்றும் போட்டியை நடத்த முடியவில்லை எனில் லீக் போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற குஜராத் அணியின் கைகளில் ஐபிஎல் கோப்பை ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத் அணி தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வெல்லும் நிலை உருவாகியுள்ளது.சென்னை அணியின் ரசிகர்கள் மீண்டும் அகமதாபாத்தில் மழை வரக் கூடாது என பிரார்த்தனை செய்ய தொடங்கிவிட்டனர். இருப்பினும் இன்றைய ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டால் குறைந்த ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தவும் ஐபிஎல் நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!