undefined

இன்று கருட பஞ்சமி... திருப்பதியில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா... எப்படி வழிபடுவது? என்னென்ன பலன்கள்?!

 

இன்று ஜூலை 29ம் தேதி கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு, திருப்பதி திருமலையில், இன்று மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கருட பஞ்சமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கருட பஞ்சமி விழா இன்று ஜூலை 29ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.

இன்று மாலை  மலையப்ப சுவாமி தனது விருப்பமான கருட வாகனத்தில் எழுந்தருளி, மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானை தரிசனம் செய்ய உள்ளனர்.

கருட பஞ்சமியில் சுவாமியை தரிசித்தால், புதுமணத் தம்பதிகளின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், குழந்தைகள் வலிமையாகவும், கருடனைப் போல நல்ல ஆளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?