undefined

இன்று சிவராத்திரி... வழிபடும் முறைகளும், விரதமுறை பலன்களும்!

 

இன்று ஆவணி மாத சிவராத்திரி தினம். சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது சிவனை வழிபட மிஸ் பண்ணாதீங்க. ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், விஞ்ஞான ரீதியாகவும், சிவராத்திரியன்று நம்முடைய முதுகு தண்டுவடம் வளையாமல் நேராக நிமிர்ந்து இருப்பது ஆன்மிக, ஆரோக்கிய பலத்தைத் தரும். அதனால் தான் இந்துக்கள் சிவராத்தியன்று தூக்கத்தைத் துறந்து சிவ வழிபாடு நல்லது என்று ஆறு கால பூஜைகளையும் ஒவ்வொரு சாமத்திலும் வகுத்து வைத்தார்கள். 

சிவராத்திரி தினத்தில் மௌன விரதம் இருப்பது சிறப்பான விரதமாக கருதப்படுகிறது. காலையில் குளித்துவிட்டு அபிஷேகம் வழிபாடு செய்து திருவாசகம், சிவபுராணங்களை ஆரம்பிக்கலாம். கோயில் செல்ல முடியாதவர்கள் கூட வீட்டில் இருந்து விரதம் கடைபிடிக்கலாம் பால், தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். மாலையில் வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் உருவப்படத்திற்கு சிலைக்கு வழிபாடு செய்யலாம். 

பூஜை ஆரம்பிக்கும் முன் ஒரு முறை குளிக்க வேண்டும். வீட்டில் இருக்கிற எளிமையாக சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம்.  கருங்கல், உலோகத்தால் ஆன சிலைகளுக்கு அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி அன்றூ மொத்தம் 4 காலம் உள்ளது. முதல் காலம் இரவு 7:30 மணிக்கும் இரண்டாம் காலம் இரவு 10.30க்கும் மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கும் நான்காம் காலம் அதிகாலை 4:30 மணிக்கு ஆரம்பிக்கிறது. இந்த நான்கு காலங்களும் வெவ்வேறு கோயில்களில் ஒவ்வொரு மாதிரி அமைந்து இருக்கும். அவரவருக்கு  அருகில் உள்ள கோயிலில் கடைபிடிக்கப்படும் காலத்தை பின்பற்றி  நேரத்தை வகுத்துக் கொள்ளலாம்.  சிவபெருமானுக்கு பிடித்த வில்வம் இலை, மலர்கள் வைத்து அபிஷேகம் செய்யலாம்.  கோயிலில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே சிவன் விக்ரகம் வைத்து வழிபாடு செய்து அபிஷேகம் செய்யலாம். 

முதல் காலத்தில் பாலபிஷேகம் செய்து பாசிப்பருப்பு பொங்கல் செய்யலாம். இரண்டாம் காலத்தில் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து இனிப்பு பாயாசம், கற்கண்டு பொங்கல் செய்யலாம். 

மூன்றாம் காலம் சிவபெருமானுக்கு முக்கியமான காலமாகும். அப்போது தேனால் அபிஷேகம் செய்து எள் சாதம் செய்து படைக்கலாம். நான்காவது காலம் கரும்பு சாற்றினால் அபிஷேகம் செய்து சுத்த சாதத்தில் நெய் ஊற்றி படைக்கலாம்.  

தூங்காமல் இருப்பவர்களுக்கு இந்த வழிபாடு துணையாக இருக்கும். நிறைய அபிஷேகம் செய்ய முடியாது அதற்கு ஏதோ ஒரு நெய்வேதியம் ஒரு அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி அன்று திருவாசகம் படிக்கலாம். நாளை காலை தீபாரதனை செய்து சிவராத்திரி வழிபாட்டை முடித்து விட வேண்டும்.

குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் விரதமாக இருக்கலாம். மலர்கள் தீபங்கள் அர்ச்சனைக்கு கொடுத்து விடலாம்.  வீட்டில் செய்ய முடியாதவர்கள் கூட கோவிலில் வாங்கி கொடுக்கலாம்.அதே மாதிரி பட்டினி விரதம் இருப்பவர்கள் கோயில்களில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிடலாம். சிவராத்திரி விரதத்தை 27ம் தேதி காலையில் பூர்த்தி செய்யலாம் நன்றாக சாப்பிட்டுவிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம்.

சிவராத்திரி அன்று தூங்காமல் இருந்து அடுத்த நாள் காலையிலும் தூங்கக்கூடாது அடுத்த நாள் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டு குடும்பம் செழிக்க நம் அனைத்து பிரார்த்தனைகளையும் முடித்து விட்டு இரவு 7 மணிக்கு படுத்து தூங்குவது சிறப்பு. 

முழுநேரம் கண்முழிக்க முடியாதவர்கள் இரவு 11.45ல் இருந்து ஒரு மணி வரை கண் முழிக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அலுவலகத்திற்கு செல்பவர்கள் எல்லாம் 12 மணிக்கு பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் விழித்திருந்து தியானம் செய்யலாம்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?