இன்று 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு.. 2.25 லட்சம் பேர் போட்டி... இவற்றுக்கெல்லாம் தடை!
இன்று தமிழகம் முழுவதும் 2 நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 45 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் 2.25 லட்சம் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கின்றனர். தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி, காவல் துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், சிறைத் துறையில் 180 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்கள், தீயணைப்பு துறையில் 631 தீயணைப்பாளர் பணியிடங்கள் மற்றும் பழங்குடியினருக்கான 21 பணியிடங்கள் என மொத்தம் 3,665 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
தெளிவான தேர்வை உறுதிசெய்ய, இந்த முறை முதல்முறையாக விண்ணப்பதாரர்களின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணையவழி விண்ணப்பிக்கும் போதே பெருவிரல் ரேகை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு மையங்களில் முறைகேடுகள் தடுக்கும் நடவடிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் இன்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அதற்கு பிறகு வருவோருக்கு அனுமதி இல்லை. தேர்வு மையத்திற்குள் கைப்பேசி, ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், கைக்கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்க தனி வசதி இல்லாததால், வீட்டிலிருந்தே எதையும் கொண்டு வராமல் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்குச் செல்லும் போது நுழைவுச் சீட்டுடன் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசல் பிரதியையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க