undefined

இன்று பனிமய மாதா திருவிழா... லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

 

இன்று ஆகஸ்ட் 5ம் தேதி உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலய பெருவிழா நடைபெற உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தூத்துக்குடியில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், உள்ளூர் மக்களும் திருவிழாவில் பங்கேற்க வசதியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவினைத் தொடர்ந்து இன்று ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும் , அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி, தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு 5.8.2025, செவ்வாய்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின்படி (Negatiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 9.8.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?