undefined

 மக்களே உஷார்..  ரூ500 நோட்டை தொட்டா ரூ5000 பரிசு... முதல்வர் படத்துடன் பகீர் கிளப்பும் ஆன்லைன் மோசடி!

 

 சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியில் வசித்துவருபவர்  வினோத். இவர்  செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது  ரூ500 மந்திர நோட்டை தொட்டால் ரூ5000 கேஷ் பேக் பெறலாம் எனக் கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் அந்தப்பதிவை கிளிக் செய்த போது அவருடைய  வங்கிக் கணக்கில் ரூ5000  வந்துள்ளதாக குறுந்தகவல் அவருக்கு வந்தது.  


வங்கி கணக்கு இருப்பை வினோத் சரிபார்த்த போது ரூ4650  மொத்தமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் லிங்கை அனுப்பி இந்த மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்த நிலையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் இது போன்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!