undefined

தமிழகத்தில் அவலம்... சாலை சரியில்லை.. பாதியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்.. குழந்தையின் சடலத்தை 10 கி.மீ. சுமந்தே சென்ற பெற்றோர்... !

 

சரியான சாலை இல்லாததால், நல்ல பாம்பு கடித்த குழந்தை ஒன்று அநியாயமாக உயிரை இழந்திருக்கிற அவலம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. ஏதோவொரு மூலையில் எல்லாம் இந்த அவலம் நிகழவில்லை. அமைச்சர் துரைமுருகனின் தொகுதியான வேலூர் மாவட்டத்தில் தான் இந்த கொடுமை அரங்கேறி இருக்கிறது. இத்தனைக்கும் அதிக முறை காட்பாடியிலும், வேலூரிலும் தேர்தலில் ஜெயித்து வலம் வந்து கொண்டிருப்பவர் துரைமுருகன்.

ஏதோ தமிழகத்தின் கடைக்கோடியில் புதிதாக ஜெயித்த எம்.எல்.ஏ., தொகுதிக்கு நல்லது செய்ய மக்களின் அவல நிலையைக் கூறினாலே உடனடியாக அதற்கு தீர்வு கண்டு, மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் கலைஞர். கலைஞருக்கு அத்தனை நெருக்கமான துரைமுருகன், தனது தொகுதியில், இது போன்ற சாலை வசதி இல்லாத நிலையை ஏறக்குறைய 50 வருஷங்களாக கண்டுக்கொள்ளாமலேயே இருந்திருக்கிறது தமிழக மக்களின் தலையெழுத்து என்று கடந்து தான் போகணும் போல.

இது ஏதோ திமுக மீதான குற்றச்சாட்டு கிடையாது. அதே தொகுதியில் அதிமுக சார்பிலும் போட்டியிட்டு ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், யாருமே மக்களின் நலனைக் கண்டுக்கொள்ளவில்லை என்பது தான் நிஜமாக நிற்கிறது. அணைக்கட்டு அருகே குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரம் கையில் சுமந்தபடியே வீட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர் பெற்றோர்.

<a href=https://youtube.com/embed/AjF8wHMbPvo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/AjF8wHMbPvo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் விஜி. இவரது மனைவி பிரியா. கூலித் தொழில் செய்து வரும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், இரவு வீட்டின் முன்பாக உறங்கிக் கொண்டிருந்த போது நல்ல பாம்பு ஒன்று குழந்தை தனுஷ்காவை கடித்துள்ளது. 

உடனடியாக குழந்தையை அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அருகில் இருக்கும் அணைக்கட்டுக்கு அழைத்துச் செல்லவே சாலை வசதிகள் சரியில்லாததால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போடு, பாதி வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. 

தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்ற போது, சாலை வசதி இல்லாததால் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி விட்டனர். 

இதனையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று, பின்னர் கால்நடையாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெற்றோர் குழந்தையின் சடலத்தை தூக்கி சென்றனர். சாலை வசதி இருந்திருந்தால், குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்