தென்காசியில் சோகம்... நாய்கள் கடித்து 30 ஆடுகள் உயிரிழப்பு!
நாய்கள் கடித்ததில் 30 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தென்காசியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் லியாகத் அலி வழக்கம் போல் நேற்று ஆட்டுப்பண்ணைக்குச் சென்ற போது ஆடுகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதிகாலையில் ஆட்டுப்பண்ணைக்குள் புகுந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது தெரிய வந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் நடந்துள்ள இந்த நாய்க்கடி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக லியாகத் அலி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!