undefined

விழுப்புரத்தில் சோகம்... வகுப்பறையில் மயங்கி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு!

 

விழுப்புரம் மாவட்டத்தில் திரு.வி.க.வீதியில் செயல்பட்டு வருகிறது தனியார் பள்ளி.  இந்த பள்ளியில் விழுப்புரம் நகரப் பகுதியான விராட்டிக் குப்பத்தில் வசித்து வரும்  மகேஸ்வரியின் மகன் 17 வயது மோகன்ராஜ் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவர் மோகன்ராஜ் இன்று  காலை 7 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டார். அப்போது, பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர் மோகன்ராஜ் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. 

உடனடியாக  சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, மாணவர் மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த மாணவருக்கு மூச்சு திணறல் இருப்பதாகவும், இங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால், உடனே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியிருந்தார். அரசு மருத்துவமனைக்கு மாணவரை கொண்டு சென்றதில்  மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து அந்த தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  பள்ளி வகுப்பறையில் மாணவர் மயங்கி விழுந்த சம்பவம் வகுப்பறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

போலீசார்  மாணவர் மோகன் ராஜின் தாய் மகேஸ்வரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவர் மோகன்ராஜ்க்கு ஏற்கனவே உடல் உபாதை இருந்ததாக கூறியுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து  பள்ளி தாளாளர் , “மாணவன் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென மயங்கினார். உடனடியாக மானவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?