பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 14 ஆம் தேதி பொங்கல், 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16 ஆம் தேதி உழவர் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நாட்களில் வெளியூரில் வசிக்கும் மக்கள் பெருமளவில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம் என்பதால், பஸ் மற்றும் ரயில்களில் பெரும் பயண நெரிசல் ஏற்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்திய ரயில்வே இன்று (நவம்பர் 8) முதல் ஜனவரி 9 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியுள்ளது. காலை 8 மணியிலிருந்து ஆன்லைன் மற்றும் கவுண்டர் வழியாக முன்பதிவு தொடங்கியவுடன் பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.
பொங்கல் விடுமுறையைக் குறிவைத்து பலரும் முன்கூட்டியே பயணத் திட்டமிடல் செய்து வருவதால், சில ரயில்களில் ஏற்கனவே வண்டிகள் நிறைவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன்பதிவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க