undefined

  ஆகஸ்ட் 30 வரை திருச்சி,  தாம்பரம் சிறப்பு ரயில்  நீட்டிப்பு!

 


 
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆகஸ்ட் 1 முதல்  ஆகஸ்ட் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில்   வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்  திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயில் (எண்: 06190/06191) இருமாா்க்கத்திலும் ஒவ்வொரு வாரமும்  செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் ஜூலை 30ம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கச்சேகுடாவிலிருந்து ஒவ்வொரு வாரமும்  திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரயிலும்  மறுமாா்க்கமாக மதுரையிலிருந்து ஒவ்வொரு வாரமும்  புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு கச்சேகுடா செல்லும் ரயிலும்  ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை பண்ருட்டியில் ஒரு நிமிஷம் தற்காலிகமாக நின்று செல்லும்.


கூடுதல் பெட்டி: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 12027/12028) இருமாா்க்கத்திலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) முதல் ஒரு குளிா்சாதன இருக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?