டிரம்ப் பாலியல் கிரிமினல் வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்... இன்று முதல் விசாரணை தொடக்கம்!
ஆபாச பட நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.109 கோடி) பணம் வழங்கிய குற்றச்சாட்டு குறித்த விசாரணை மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தொடங்கியது. இதையொட்டி நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல் என்பவர் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
இது பிரசாரத்தின் போது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு ரூ.1 கோடி பணம் வழங்கி அந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சி செய்தார். நடிகைக்கு பணம் வழங்கியதை தேர்தல் செலவு கணக்கில் டிரம்ப் சேர்த்துள்ளார். இதனால் போலியாக செலவை காட்டியதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தது.
அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவானவர்கள். எனவே வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று டிரம்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
96 வருங்கால ஜூரிகள் அடங்கிய முதல் குழுவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தாங்கள் பாரபட்சமற்றவர்களாக இருக்க முடியும் என்று அவர்கள் நம்பவில்லை எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தள்ளுபடி செய்யப்பட்டனர். எனது சக ஊழியர் ஆலன் ஃபியூயர், இதுபோன்ற உயர் தொடக்க தோல்வி விகிதம் ‘மிகவும் அரிதானது’ என்று குறிப்பிட்டார், இது நாட்டின் பெரும்பகுதி ஏற்கனவே மனதைக் கட்டியெழுப்பிய ஒரு பிரதிவாதிக்கு நடுநிலையான நடுவர் மன்றத்தில் அமர்வதில் உள்ள சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இது தொடர்பான வழக்கு இன்னும் சில வாரங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் டிரம்ப் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்காக தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வரவேண்டி உள்ளதால் வாரத்தில் 2 அல்லது 3 நாள்கள் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கலந்து கொள்ள முடியும்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!