96% வாக்குப்பதிவு... விறுவிறுப்புடன் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்!
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், 15வது குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
குடியரசு துணைத்தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், 'இந்தியா' கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் மோடி முதலாவதாக வாக்களித்தார். அதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் வாக்களிக்கத்தனர்.
முன்னாள் பிரதமரும், மாநிலங்களவையில் ஜேடி(எஸ்) எம்பியுமான எச்.டி. தேவகௌடா சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா ஆகியோரும் அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பிரகலாத் ஜோஷி வாக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மாலை 3 மணி நிலவரப்படி இதுவரை 96 சதவீத எம்பிக்கள் வாக்களித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!