இந்தியா முழுவதும்  ட்விட்டர் சேவை முடங்கியது... பயனர்கள் திண்டாட்டம்!

 
 

தகவல் பரிமாற்ற செயலியான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியது முதலே அடுத்தடுத்த பிரச்சனைகள், சர்ச்சைகள் , மாற்றங்கள் தினம் நிகழ்ந்து கொண்டே உள்ளன. இன்று என்ன என பயனர்கள் காலை எழுந்ததும் பார்க்க வேண்டிய அளவுக்கு தினசரி செய்தியாகிவிட்டது. அந்த வகையில்  இந்தியா முழுவதும் ட்விட்டர் சேவை முடங்கியுள்ளது.  இணையத்தளங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளின் நிகழ்நேர செயலிழப்பைக் கண்காணிக்கும் தளமான Downdetector.in, சமூக ஊடகத் தளத்தில் உள்ள சிக்கல்களின் அறிக்கையிலும் ஒரு ஸ்பைக்கைக் காட்டுகிறது.


தொடர் சிக்கல்களை எதிர்கொள்ளும் பயனர்கள், "ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் ஏற்ற முயற்சிக்கவும்" எனக் காட்டப்படுகிறது. ஆனால் X  தலம் இதுவரை தனது செயலிழப்பை ஒப்புக் கொள்ளவில்லை. அதே நேரத்தில்  செயலிழப்பின் பின்னணியில் உள்ள சரியான காரணமும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  


அவுட்டேஜ் டிராக்கர்களின் லைவ் அவுட்டேஜ் வரைபடத்தின்படி, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, கட்டாக், அகமதாபாத், மும்பை, ஹைதராபாத், சண்டிகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ஹாட்ஸ்பாட்களுடன், இந்தியா முழுவதிலும் இருந்து பயனர்கள் X தளத்தில் சிக்கல்களை எதிர் கொள்வதாக கண்டறியப்பட்டது.  இதே போல் கடந்த 2 வாரங்களுக்கு முன்  X ஒரு பரவலான செயலிழப்பை சந்தித்ததாக தெரிகிறது. இன்று  காலை 10:41 மணி முதல் எக்ஸ் வலைதளம் முடங்கியுள்ளது.   

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!