பிலிப்பைன்ஸை நோக்கி வேகமாக வரும் ‘பங்வோங்’ புயல்... 14 லட்சம் பேர் அவசர முகாம்களுக்கு மாற்றம்!
பசிபிக் பெருங்கடலில் உருவான ‘கல்மேகி’ புயல் தாக்கத்தில் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தன. மழை மற்றும் வெள்ளத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் பசிபிக் கடலில் உருவான புதிய புயல் ‘பங்வோங்’ பிலிப்பைன்ஸை நோக்கி வேகமாக நகர்கிறது.
வானிலை மையம் வெளியிட்ட தகவல்படி, இந்த புயல் அரோரா அல்லது இசபெலா மாகாணம் வழியாக மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, 14 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு அவசர முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 86 துறைமுகங்களில் 6,600க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால், கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், புயல் எச்சரிக்கையாக பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 325 உள்நாட்டு மற்றும் 60 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகமாகும் பகுதிகளில் மீட்பு பணிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தேசிய பேரிடர் படைக்கு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க