undefined

சூப்பர்...  மாநகர பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட்!

 

 சென்னை மாநகரத்தில் அரசுப் பேருந்துகளில் மின்னணு இயந்திரங்கள் மூலம் டிக்கெட் எடுக்கும் முறை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை  பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகமான  நிலையில் இந்த மின்னணு இயந்திரங்களை தற்போது சென்னையில் உள்ள அனைத்து 32 டெப்போக்களிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன்  இந்த ETM இல் யு பி ஐ, பணம் மற்றும் கார்டுகளை பயன்படுத்தி பயணிகள் தங்களுடைய பயணத்திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் இனி சில்லறை பிரச்சனைகள் ஏற்படாது என மாநகர அரசு பேருந்து போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  

அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொபைல் பேங்கிங் அதாவது ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை   தெரிவித்துள்ளது.    பிப்ரவரி மாதம் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமல் செய்யப்பட்டது.  PlayUnmute Fullscreen Skip Ad யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. அத்துடன்  விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது . போக்குவரத்துறையின் இந்த அறிவிப்பு பேருந்து பயணிகளிடையேபெரும் வரவேற்பை பெற்றுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!