undefined

சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா.. பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியதால் நடவடிக்கை!

 

 உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளித்து வந்த அமெரிக்கா, அந்த பணத்தை பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை ஒழிக்க பயன்படுத்துவதாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனை நிறுத்தியது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானிற்கு அளித்த நிதியுதவியை நிறுத்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட பாகிஸ்தானுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் தயாரித்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தொழில்நுட்பம் சிலவற்றை வழங்கியதாக கூறி 3 சீன நிறுவனங்களுக்கும், 1 பெலாரஸ் நிறுவனத்துக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இது அவர்களின் சர்வதேச சந்தையை நேரடியாக பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!