கந்துவட்டி கொடுமை... மலை உச்சியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!
கந்துவட்டி கொடுமையால் 100 அடி உயர மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகன் மனைவி லெட்சுமி. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். முருகன் அதே பகுதியைச் சார்ந்த மாரியம்மாள் என்பவரிடம் ரூ.6 லட்சம் கடன் வாங்கி உள்ளார். தற்போது வட்டியும் அசலும் சேர்த்து ரூ.9 லட்சம் தர வேண்டும் அல்லது வீட்டை எழுதி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மாரியம்மாள் முருகன் லட்சுமி இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த லெட்சுமி சொக்கம்பட்டி பகுதியில் உள்ள மலையில் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!