வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு... மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்கள் அதிர்ச்சி!
மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் மகள் மணவிழாவில் கலந்து கொள்வதற்பதற்காக தலைவர் வைகோ நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்.
திடீரென நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு தலைவர் வைகோ உடல் நலம் பெறுவார். பயப்படுகிற அல்லது கவலை கொள்கிற விஷயம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!