வெட்றா…வெட்றா.. சொத்து பிரச்சினையில் ஒரு குடும்பம் மீது கொடூர தாக்குதல்.. பதற வைக்கும் வீடியோ !!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(40). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் குடும்பத்திற்கும் நிலப்பிரச்னையில் முன்விரோதம் இருந்து வருகிறது. இரு குடும்பத்தினரும் உறவினர்கள் ஆவர். 

இந்த பிரச்சினைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும் நிலம் தொடர்பாக இரு குடும்பத்தினரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்த  நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிந்தனின் மனைவி சுசிலா, தம்பிகள் சங்கர், கலியமூர்த்தி, இவர்களது தாய் உண்ணாமலை ஆகியோர் தங்கள் நிலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தனர். 

<a href=https://youtube.com/embed/UeFP9wh1ZTw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/UeFP9wh1ZTw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Crime Time | நிலத்தகராறில் இரண்டு குடும்பங்கள் மோதல் - நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு | Tamil News" width="556">

அப்போது ராஜசேகர், அவரது மகன்கள் பாலகிருஷ்ணன், பாபு ஆகியோர், அங்கு சென்றுக்கொண்டிருந்த கோவிந்தன் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், அவரது மகன்கள் சேர்ந்து தாய், மகள், மகன்களை விரட்டி விரட்டி கொடுவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இருந்து தப்பிக்க முயன்றவர்களை விடாமல் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்து கரியாலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சங்கரின் அண்ணன் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கரியாலூர் போலீசார் வழக்கு பதிந்து ராஜசேகர் (54) பாலகிருஷ்ணன்(25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

நிலத்தகராறில் 4 பேரை கொடுவாளால் வெட்டிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் தொடர்பாக அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!