undefined

இன்று வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்... குவியும் பக்தர்கள்!

 

இன்று ஆகஸ்ட் 29ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வெளியூர், வெளி  மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக குவிந்து வருகின்றனர். 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா இன்று ஆகஸ்ட் 29ம் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?