அசைந்தபடியே பவனி வந்த தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்! விண்ணைப் பிளந்த ‘சிவ சிவ’ கோஷம்.. வைரலாகும் வீடியோ!
தமிழரின் கட்டிடக்கலை, வரலாற்று சிறப்பு மிக்க கலை , கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக 1000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமான ஆலயமாக திகழ்ந்து வருவது தஞ்சை பெரிய கோயில்.இங்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றபோதிலும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக 18 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைக் காண தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து மட்டுமல்ல இந்தியா , உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
சிவகணங்கள் முழங்க, தாரை தப்பட்டை, நாதஸ்வர இசையுடன் பாரம்பரிய இசை முழங்க பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர்.
மேல வீதியில் தொடங்கிய திருத்தேர் கொங்கனேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதி ரத்தினபுரீஸ்வரர் கோயில், கீழராஜ வீதி , தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு ராஜ வீதிகளின் வழியாக சென்று மீண்டும் மேல வீதியில் நிலைக்கு சென்றுள்ளது. இந்நிகழ்ச்சியை காண தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!