தி கேர்ள் பிரண்ட் பட விழாவில் ராஷ்மிகாவை முத்தமிட்ட விஜய் தேவரகொண்டா... வைரலாகும் வீடியோ!

 

ராகு ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கேர்ள் பிரண்ட் திரைப்படம், பெண்களை மையமாக வைத்து உருவான கதைக்களத்தால் பாராட்டைப் பெற்றுள்ளது. தீட்சித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்த படம், வெளியான சில நாட்களிலேயே நல்ல விமர்சனங்களைத் தட்டிச்சென்று, வசூல் ரீதியாகவும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்திற்காக ராஷ்மிகா மிகுந்த உழைப்பை எடுத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அவருடைய நடிப்பும், படத்தின் சமூக நோக்கு கொண்ட விதமும் ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையடுத்து தி கேர்ள் பிரண்ட் படத்தின் வெற்றி கொண்டாட்ட விழா நேற்று ஐதராபாதில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். விழா சூடுபிடித்துக் கொண்டிருந்த நிலையில், ராஷ்மிகா ஊடகங்களுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது, விஜய் தேவரகொண்டா மேடைக்கு வந்து, அவருடைய கையைப் பிடித்து முத்தமிட்டார். இந்தச் சம்பவம் அங்கு இருந்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடையே ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

ராஷ்மிகாவின் கையை முத்தமிடும் விஜய் தேவரகொண்டாவின் அந்த தருணம், நிகழ்ச்சி நடைபெற்ற சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இருவருக்குமிடையேயான நட்பை பாராட்டி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!