undefined

விஜய் தேவரகொண்டா திருப்பதியில் சாமி தரிசனம்! 

 
 


விஜய் தேவரகொண்டாவின்   கிங்டம் திரைப்படம் ஜூலை  31ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அப்படத்தின் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸுடன் திருப்பதியில் அவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.  

இவர்களுடன் படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சியும் சாமி தரிசனம் செய்தார். இது குறித்த  வீடியோக்கள் சமூக வலைதளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் 'கிங்டம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்த நிலையில், இறுதியாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்  ஜூலை 31 ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?