undefined

VinFast நிறுவனத்தில் தூத்துக்குடி இளைஞர்களுக்கே வேலை வாய்ப்பு... மு.க.ஸ்டாலின் உறுதி!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாட்னாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற எலக்ட்ரிக் கார் நிறுவனம் தனது தொழிற்சாலையை ரூ.1,119 கோடியில், 114 ஏக்கரில் அமைத்து வருகிறது.  இந்த தொழிற்சாலையில் இரண்டு மாடல்களில் கார் தயாரிக்கப்பட உள்ளன.  இதன் விற்பனை தளத்தை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய  ஸ்டாலின் ” தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என  நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருக்கக்கூடிய தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரையும் அன்போடு வருக! வருக! வருக! என நான் வரவேற்கிறேன்!  தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முதன்மையாக கொண்டு நம்முடைய திராவிட மாடல் அரசு அதற்கான கட்டமைப்புகளை மிக சிறப்பான வகையில் உருவாக்கியிருக்கிறது.

மாநாடுகளையும், முதலீட்டாளர்களுடனான முதலீட்டாளர்கள் சந்திப்புக்களையும் தொடர்ச்சியாக நாம் நடத்திக்கொண்டு வருகிறோம். சென்னை, கோவை, தூத்துக்குடி, துபாய், ஜப்பான், அமெரிக்கா அதுபோல ஸ்பையின், அமெரிக்கா என்று பல இடங்களில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும்படி  அழைப்பு விடுத்து இருக்கிறோம்.

2024ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த, தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்கள் கடுமையாக உழைத்துகொண்டு இருக்கிறார். பல நாடுகளுக்குசென்று, வெளிநாட்டு முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து குவிக்கிறார். அதெல்லாம் தொழில் நிறுவனங்களாக உருவாக பாடுபடுகிறார்.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும். பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். சொன்னதைச் செய்வோம் என்பதுதான் நம்முடைய அரசின் குறிக்கோள்! தூத்துக்குடி VinFast நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கே அதிகளவில் பணி வழங்கப்படும். முதலமைச்சராக இருக்கக்கூடிய நான் என்னென்ன சொல்கின்றேனோ, அதையெல்லாம் தொழில்துறையில் செய்து கொண்டு வருகிறார் தம்பி டி.ஆர்.பி.ராஜா  .

முத்து நகர் தூத்துக்குடியில் 2 வது முறையாக இந்நிகழ்வு நடைபெறுகிறது. துறைமுகமும், இயற்கை வளமும் திறமையான மனிதவளமும் நிறைந்திருக்கும் இந்த மாவட்டத்தை தொழில்வளர்ச்சி மிக்க மாவட்டமாக மாவட்டங்களில் அமைக்கப்படும் தொழிற் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். தென் பூங்காக்களில், தொழிற்சாலைகளுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, எப்போது வேண்டும் என்றாலும் உடனே தொழில் தொடங்கலாம் என்ற தயார் நிலையில், இந்த தொழிற் பூங்காக்கள் தயாராக இருக்கிறது.

நீர்த்தேவையை நிறைவு செய்ய, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையும் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் டைடல் பார்க்கும்,  தூத்துக்குடி மாவட்டத்தில் நியோ டைடல் பார்க்கும் தொடங்கப்பட்டு உள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில், டாடா எரிசக்தி மற்றும் விக்ரம் சோலார் எரிசக்தி ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகரில் 1052 ஏக்கர் பரப்பளவில் PM மித்ரா பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில், நம்முடைய தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்” எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?