நேபாளத்தில் வன்முறை... இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

 

நேபாளத்தில் வன்முறையைத் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருவதால், அங்குள்ள இந்தியர்களுக்கான அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி அவசர உதவிக்கு +977-9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

View this post on Instagram

A post shared by Prafful Garg (@praffulgarg)

அத்துடன்  அத்தியாவசிய தேவைகளின்றி இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்  எனவும், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், நேபாளத்தில், அரசுக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடத்தப்பட்டு  வரும் நிலையில், இந்திய சுற்றுலாப் பயணி தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.


இது குறித்து பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பேசிய வீடியோவில்  போராட்டக்காரர்கள் கைகளில் குச்சியுடன் துரத்தியதாக குறிப்பிட்டுள்ளார். நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் தற்போதைய இருப்பிடத்தில் பாதுகாப்பாக இருக்கும்படியும்,   தெருவில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  நேபாளத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், நிலைமை சீரடையும் வரை பயணத்தை ஒத்திவைக்கும்படி  இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?