வைரல் வீடியோ... காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரித்தபோது ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டர்!
பிரிட்டனில், காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரித்த போது தவறி ஏரிக்குள் ஹெலிகாப்டர் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
பிரான்சின் பிரிட்டனி மாகாணம் ரோஸ்பெர்டன் நகரில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
தண்ணீரை சேகரிக்க முயன்றபோது ஹெலிகாப்டரின் அடிப்பகுதி ஏரியில் உள்ள தண்ணீர் மீது உரசியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!