undefined

வாக்காளர் சிறப்பு திருத்தம்... இன்று ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

 

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை எதிர்த்து முதல்வர் தலைமையிலான தி.மு.க. தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்த விவகாரத்தில் தி.மு.க. சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்ப்புகள் இருந்தபோதும் தேர்தல் கமிஷன் இந்த சிறப்பு திருத்த பணியை தொடங்கியதை தொடர்ந்து, தி.மு.க. மாவட்ட அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. வாக்காளர்களுக்கு தேவையான படிவங்கள் நேரத்துக்குள் வழங்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்களிடம் சரியாக சேர வேண்டியது அவசியம் எனவும் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெற உள்ளது. முதல்வரும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பணி சிறப்பாக நடைபெற ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் முக்கியமாகக் கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!