undefined

2,500 நாய்களை புதைத்து உரமாக்கி இருக்கோம்... சர்ச்சையைக் கிளப்பிய போஜே கவுடா!

 

நாடு முழுவதும் தெரு நாய்கள் குறித்த விவாதம் கடந்த ஒரு வார காலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக முன்வைக்கப்படுகிற குற்றச்சாட்டில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் தலையிட்டிருக்கிறடு.

ஆமாம், டெல்லியில் என்சிஆர் தெருக்களில் நாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது குறித்து  உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதன்படி  ஆகஸ்ட் 11ம் தேதி உத்தரவையும் பிறப்பித்தது. 

இந்நிலையில்  தெருநாய்கள் பிரச்சினை குறித்த சபை விவாதத்தின் போது கர்நாடக ஜேடி (எஸ்) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்எல் போஜேகவுடா   சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கர்நாடகா மாநிலம் சிக்கமகளூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது 2,500 தெருநாய்களைக் கொன்று, மரங்களுக்கு அடியில் புதைத்து இயற்கை உரமாகப் பயன்படுத்தியதாக நேற்று சட்டமன்றத்தில் JDS கட்சி எம்.எல்.சி போஜேகவுடா  பேசியுள்ளார். தெருநாய்களை அகற்றுவதை யாராவது எதிர்த்தால், அவர்களின் வீடுகளுக்குள் 10 தெருநாய்களை விட வேண்டும்” எனவும் ஆவேசமாக கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?