எங்கள் சகோதரரின் இரத்தத்திற்கு நாங்கள் பழிவாங்காமல் விடமாட்டோம்... லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதி இந்தியாவுக்கு மிரட்டல்… பரபரப்பு வீடியோ!
ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு எதிராக “பழிவாங்கல்” செய்யவுள்ளதாக லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் மூத்த தளபதி சைஃபுல்லா கசூரி எடுத்துள்ள சபதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர் பகுதிகளில் வெள்ள நிவாரணம் என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் – குறிப்பாக LeT மற்றும் JeM – திறந்தவெளியில் செயல்பட்டு வந்தன. இவை பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவத்திடம் இருந்து நேரடி நிதியுதவி பெறுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அவர் பாதுகாப்பான புகலிடங்களுடன், ISI ஆதரவுடன் இயங்குவதாகவும், அரசியல் பாதுகாப்பும் வழங்கப்படுவதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!