undefined

 ஏன் முகவரி இல்லாத கடிதத்திற்கு  பதில் போட வேண்டும்? ... கமல்ஹாசன் நச் பதில்!  

 
 


தவெகவின் 2வது மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்  பேசிய விஜய், நான் ஒன்றும் ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். 

இந்த வாசகம் நடிகர் கமல்ஹாசனை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருதப்பட்டு, செய்தியாளர்கள் கமலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். இது குறித்து எம்.பி.  கமல்ஹாசன் “விஜய் எனக்கு தம்பி” என்றும், “அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை, முகவரி இல்லாத கடிதத்திற்கு நான் ஏன் பதில் போட வேண்டும்?” எனத் தெரிவித்துள்ளார்.  


இது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துவதாகவும், விஜய்யுடனான நட்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்துவதாகவும் பலரால் பார்க்கப்பட்டது. இந்த பதில், கமல்ஹாசனின் அரசியல் அனுபவத்தையும், விமர்சனங்களைப் பொறுமையாகக் கையாளும் திறனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?