கணவனின் சொத்தை மனைவி அனுபவிக்கலாம்,  விற்க அனுமதியில்லை.... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 

 இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உயிரிழந்த ஒரு நபருக்கு மனைவி மற்றும் 6 பிள்ளைகள் மற்றும் ஒரு பேத்தி . இவர்கள் சொத்தை பிரித்து கொள்வது குறித்த  வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், “உயிரிழந்த கணவன் சொத்தை இந்து மனைவி வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில்  அந்த சொத்தை விற்கவோ அல்லது கைமாற்றவோ முடியாது.கணவன் உயிரிழந்த பிறகு, வருமானம் இல்லாமல் இருக்கும் பெண்கள் கணவனின் சொத்தை அனுபவித்துக் கொள்ளலாம்.

அதற்காக முழுஉரிமையும் பெண்களுக்கே மனைவிமார்களுக்கே  வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பெண்களுக்கு வருமானம் இல்லாத நிலையில், அவர்கள் பிள்ளைகளை நம்பி இருக்கக்கூடாது என்பதால் இந்த உரிமை வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.   இந்த பெண்கள் அந்த சொத்துக்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியும். ஆனால் விற்க முடியாது,” எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!