undefined

  பகீர் வீடியோ... 'ஐசியு'வில் மாந்திரீக சடங்கு... அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

 


 
குஜராத் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மாந்திரீக சடங்கு செய்த காட்சி சமூக வலைதளங்களில்  வெளியாகி வைரலாகியுள்ளது. பொதுவாக நோயால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடுவர்.  அவர்களின் உடல்நிலை தீவிரமடைந்தால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுவர்.  ஆனால், குஜராத் மாநில அகமதாபாத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் மாந்திரீகம் செய்பவரால் சடங்குகள் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இது குறித்து  மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி  "முதல்கட்ட விசாரணையில் நோயாளியின் உறவினராக மாந்திரீகவாதியை அழைத்துச் சென்றனர், உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டை தவறாக பயன்படுத்தி ஐசியுவுக்குள் அவர் சென்றார். நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க போடப்பட்டிருந்த திரைகளை விலக்கி சடங்குகளை செய்துள்ளனர். குறிப்பிட்ட அந்த நோயாளி, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளார். அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார். மூட நம்பிக்கையால் அவர் குணமடைந்தார் என்பது அர்த்தமற்றது. சிசிடிவி காட்சிகளை முழுமையாக பரிசோதித்து வருகிறோம். இச்சம்பவம் 15 முதல் 20 நாள்களுக்கு முன்னதாக நடந்ததாக இருக்கலாம். இதன் மூலம் விதிமீறல்களை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேறெந்த மருத்துவமனையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உறுதி செய்யப்பட்டும்" எனக் கூறியுள்ளார்.   அதே நேரத்தில் அடுத்தடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் மாந்திரீக சடங்குகளை வீடியோ எடுத்து நோயாளிகளை குணப்படுத்துவதாக பதிவிட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!